Mnadu News

தோனி ஒருவர் மட்டுமே விளையாடி உலகக் கோப்பைகளை பெற்றுத்தரவில்லை: ஹர்பஜன் குற்றச்சாட்டு.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, தோனி ரசிகர் ஒருவர் ட்விட்டரில், “பயிற்சியாளர்கள் இல்லை, முக்கியமான வீரர்கள் இல்லை, இளம் வீரர்கள், கேப்டன்சியில் முன்னனுபவமில்லை. இருந்தும் நல்ல பார்மில் இருந்த ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வென்றது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹர்பஜன் சிங் அந்த ட்விட்டை எடுத்து கிண்டலாக பதிவிட்டு இருந்தார். அதில், “ஆமாம், இந்தப் போட்டிகளில் இவர் ஒருவர் மட்டுமே விளையாடினார். மற்ற 10 பேர்கள் விளையாடவில்லை. அதனால் அவர் தனியாக விளையாடி உலகக் கோப்பைகளை வென்றுவிட்டார்…ஆஸி. அல்லது மற்ற நாடுகள் வெற்றி பெற்றால் அவர்களது பெயரிருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் கேப்டன்களின் வெற்றி என இருக்கும. இது குழு விளையாட்டு. வெற்றியும் தோல்வியும் குழுவோடு சம்பந்தப்பட்டது” எனக் கூறியிருந்தார்.

Share this post with your friends