பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருந்தன. கடந்த ஏப்ரல் மாதம் மும்பை போலீசாரின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ராஜஸ்தானிலிருந்து அழைத்த மர்ம நபர் ஒருவர், தன் பெயர் ராக்கி பாய் எனவும், விரைவில் சல்மான் கானை கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.இந்த நிலையில்,தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோல்டி ப்ரார், “நாங்கள் அவரைக் கொல்வோம். நிச்சயமாக கொல்வோம். லாரன்ஸ் பாய் தான் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார். நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். சல்மான் கான்தான் எங்கள் இலக்கு. அதில் சந்தேகமே இல்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம். நாங்கள் அதில் வெற்றியடையும்போது உங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More