Mnadu News

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணா இயற்கையெய்தினார்.

தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் 79 வயதான கிருஷ்ணா. இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் எனப் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார்.
வயது மூப்பின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த கிருஷ்ணா, நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிருஷ்ணாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More