Mnadu News

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது: அமைச்சர் ரோஜா விமர்சனம்.

பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான என்;.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில்; பேசிய நடிகர் ரஜினிகாந்த்,சந்திர பாபுவின் 2047ஆம் ஆண்டில் ஆந்திர என்ற தொலை நோக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆந்திராவின் நிலை எங்கேயோ போய்விடும்” என்று கூறினார்.இந்நிலையில், ரஜனியின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர அமைச்சர் ரோஜா, ரஜினிகாந்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. ஏன் என்றால், 2003 ஆம் ஆண்டுடன் தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்து விட்டது. எனவே,ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ரோஜா குறிப்பிட்டார்.

Share this post with your friends