Mnadu News

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்மீது அவதூறு வழக்கு.

பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவர் நேற்று முன்தினம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த விசாரணை 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மற்றொரு நடிகையான நோரா பதேஹிக்கும் தொடர்பு இருப்பதாக வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, திட்டமிட்டு சதி செய்ததாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சில ஊடகங்கள் மீது நடிகை நோரா பதேஹி அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், “பணமோசடி வழக்கில் என் பெயரை ஜாக்குலின் தேவையின்றி இழுத்துள்ளார். என் புகழுக்கு களங்கம் விளைவிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More