Mnadu News

நடைப்பயணத்தின் இடையே இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடைப்பயணத்தின் இடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Share this post with your friends