தில் ராஜுவின் பிரம்மாண்ட தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் “வாரிசு” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட்ஸ் ஐ படக்குழு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “வாரிசு” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ நேற்று மாலை வெளியானது.
தமன் துள்ளல் இசையில், விவேக் அழகு தமிழில், தளபதி விஜய், மானசி குரல்களில், ஜானி மாஸ்டர் அசத்தும் நடனத்தில் இப்பாடல் உருவாகி உள்ளது.

மெர்சல் துவங்கி விவேக் வரிகளில் விஜய் பாடல்கள் கிட்டத்தட்ட இருபத்தி ஒரு பாடல்களுமே மாஸ் ஹிட் தான். அந்த லிஸ்ட்டில் வாரிசு பாடல்கள் குறிப்பாக ரஞ்சிதமே இடம் பெரும் என்பதில் தெளிவாக தெரிகிறது. நாளை முழு பாடல் வெளியாக உள்ளது.

சாங் லிங்க் : https://youtu.be/t0hPzfc1pLU