டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு முதல் அமைச்சர்; அரவிந்த் கேஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதுபோன்ற தீவிர குற்றச் செயல்கள் மீண்டும் மீண்டும் நடப்பது மக்களின் மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கைகளைக் குலைப்பதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் சட்டம் – ஒழுங்கை பராமரித்து குற்றங்களைத் தடுப்பதற்கான பொறுப்பில் இருப்பவர்களின் பங்களிப்பு முற்றிலுமாக இல்லை என்று நான் கூறுகிறேன். எனவே, இந்த முக்கியமான பிரச்சினை குறித்து தாங்கள், அமைச்சர்களுடன் ஓர் அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More