மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மைத் துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.