Mnadu News

நலன் குமாரசாமியின் அடுத்த புதிய முயற்சி?

சூது கவ்வும் எனும் கல்ட்:
நலன் குமாரசாமி நாளைய இயக்குநர் மூலம் குறும்படங்களை எடுத்து அதன் மூலம் திரை துறையில் நுழைந்தவர். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியையும், விமர்சனத்தையும் பெற்று தந்தது “சூது கவ்வும்”. விஜய் சேதுபதி மற்றும் அவருடன் நடித்த அனைவருக்கும் இது தரமான படமாக அமைந்தது. சந்தோஷ் நாராயணன் இசையை அனைவரும் பாராட்டி தீர்த்தனர்.

அடுத்த புதிய முயற்சி :
ஒரு காதல் படத்தை இப்படியும் எடுக்க முடியும் என்பதை “காதலும் கடந்து போகும்” படத்தின் மூலம் செய்து காட்டியவர் நலன். இதுவும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட படம்.

மசாலா படங்களுக்கு அற்பணிப்பு:
ஒரு 10 வருடங்களுக்கு முன் சென்றால் அது மசாலா படங்களின் காலம் என்றே சொல்லலாம். பாடல், ஃபைட், ஆக்சன், காதல், சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்து ஹிட் கொடுத்து வந்தனர் பல முன்னணி நடிகர்கள். ஆக, இந்த படங்களுக்கு ஒரு அற்பணிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்க, ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends