Mnadu News

நல்லகண்ணுவுக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று 98-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் ஸ்டாலின், “98 வயதிலும் கொள்கை, லட்சியத்திற்கு இலக்கணமாக செயல்படுகிறார்” எனப் பேசினார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share this post with your friends