நாகாலாந்தின் கொஹிமா நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில்,அம்மாநில முதல் அமைச்சராக 5வது முறையாக நெய்பியூ ரியோ பதவி ஏற்றார்.அவருக்கு ஆளுநர் இல.கணேசன், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.விழாவில், தடிதுய் ரங்காவ், ஜெலியாங், யாந்துங்கோ பாட்டன்ஆகியோர் துணை முதல் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஜி கைடோ அயே, ஜேக்கப் ஜிமோமி, கேஜி கென்யே, பி பைவாங் கொன்யாக், மெட்சுபோ ஜமீர், டெம்ஜென் இம்னா அலோங், சிஎல் ஜான், சல்ஹவுடுவோனுவோ க்ரூஸ் மற்றும் பி பாஷாங்மோங்பா சாங் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.நாகாலாந்தில் முதன் முறையாக எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டப் பேரவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு...
Read More