Mnadu News

நாகாலாந்தில் வரலாற்று சாதனை புரிந்த முதல் பெண் எம்.எல்.ஏ.

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் ஹெக்கானி ஜக்காலு, சால்ஹ_ட்டூ க்ரூஸ், {ஹகாலி செமா மற்றும் ரோஸி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் களமிறங்கினர்.இதில், திமாபூர்-3 தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி(என்டிபிபி) கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எல்.ஜே.பி (ராம் விலாஸ்) வேட்பாளர் அஸெட்டோ ஜிமோமியைவிட 1536 வாக்குகள் அதிகம் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாகாந்து சட்டப்பேரவை வரலாற்றில் பெண் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.ஹேக்கானி ஜக்காலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 47 வயதான ஹேக்கானி ஜக்காலு, சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார். தொழிலதிபராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More