60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது.
மாநில தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக மத்திய தேர்தல் குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இன்று நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 60 தொகுதிகளுடைய நாகாலாந்து சட்டப்பேரவையில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதனால், 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில், மாநில தலைவராக தெம்ஜென் இம்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அலோங்டாகி தொகுதியில் களமிறங்குகிறார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More