Mnadu News

நாகூர் தர்கா சந்தனக்கூடு: சந்தனக்கட்டை வழங்கும் அரசாணை வெளியீடு.

எதிர் வரும் 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு 45 கிலோ சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்தது. அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்த தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின், அதற்கான ஆணையினை தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் டாக்டர் எஸ். செய்யது காமில் சாஹிப்,நாகூர் தர்கா தலைவர் எஸ். செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

Share this post with your friends