கள்ளக் காதல் கொலைகள் :
இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் யார் என்பதை உணராமல் செய்யும் குற்றங்களுக்கு விளைவாக உயிர்கள் பலியாகும் சம்பவங்கள் தான் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. ஆம், அதுவும் திருமணத்தை மீறிய உறவால் பல குடும்பங்கள் சிதிலமடைந்து உள்ளன. ஆனால், இப்போது நடந்துள்ள சம்பவம் ஒரு உயிர் போகும் அளவுக்கு அரங்கேறி உள்ளது. அதிலும் இளம் மாணவனை கொலைகாரன் ஆக்கி உள்ளது இந்த கள்ள உறவு.
நாகப்பட்டினம் :
நாகப்பட்டினம் மாவட்டம் தேத்தகுடி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி துர்கா தேவி தம்பதி. சுந்தரமூர்த்தி விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா தேவி, மகளிர் சுய உதவிக் குழுவில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று, குழுவுக்குக் கடன் தொகை செலுத்தி விட்டு வருவதாக வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார்.
காணவில்லை:
ஆனால் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதனால் கணவர் சுந்தரமூர்த்தி நகர் முழுவதும் தேடி உள்ளார். அதே சமயம் கடற்கரைப் பகுதியில் 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சென்ற போலீசார் இறந்தவர் துர்கா தேவி என்பதை உறுதி செய்தனர்.
கொலை :
மேலும் தடையங்களின் அடிப்படையில் அவர் மீது கார் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறிந்தனர். அதேசமயம், துர்கா தேவி அணிந்திருந்த 10 சவரன் நகைகள், செல்போன் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து சி சி டி வி காட்சிகளை ஆராய்ந்த போது தான், அது தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு 20 வயது கொண்ட மாணவர் அருண் என்பது தெரிய வந்தது.
கைதான மாணவர் :
அவரை அழைத்து விசாரித்த போது தான் உண்மை அம்பலமானது. மருத்துவக் கல்லூரி மாணவர் அருணுக்கும், துர்கா தேவிக்கும் இடையே கள்ள உறவு இருந்துள்ளது. இருவரும் கடற்கரையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது தனக்கு தற்போது பணம் வேண்டும் என மாணவரிடம் துர்கா தேவி கேட்டு மிரட்டியதோடு மட்டுமில்லாமல் அதை நீ கொடுக்கவில்லை என்றால் உனக்கும், எனக்கும் உள்ள தகாத உறவை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் கோபமடைந்த அருண், துர்கா தேவி மீது காரை ஏற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் கள்ள உறவில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் கொலையும் செய்த சம்பவம் நாகபட்டினம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.