Mnadu News

நாகையில் துப்புரவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்;

நாகை நகராட்சிக்கு உட்பட்ட சாலை மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரிந்து மாடுகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்த நிலையில் நகராட்சி சார்பில் மாட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காத மாட்டின் உரிமையாளர் அலட்சிய போக்கால் நகராட்சி ஊழியர்கள் நாகை, நாகூர் பகுதி சாலைகளில் சுற்றித்திரிந்த 40 க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து சென்றனர். இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு நகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்திய பெண்ணை கைது செய்யாததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வெளிப்பாளையம் காவல் நிலையத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு வந்த நகர மன்ற தலைவர் மாரிமுத்துவிடம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Share this post with your friends