Mnadu News

நாகை அருகே குழாய் உடைப்பு-கச்சா எண்ணெய் கடலில் கலப்பு.

நாகை மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கப்பல்களுக்கு எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் இருந்து சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சாமந்தான்பேட்டை வழியாக பட்டினச்சேரி மீனவக் கிராமம் வரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயை கப்பலில் வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலைத்திற்கு எடுத்து செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், பட்டிச்சேரி மீனவக் கிராமத்தில் உள்ள சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வியாழக்கிழமை இரவு கடலில் கலந்துள்ளது. கச்சா எண்ணெய்யில் இருந்து வெளியேறும் நெடி, வாயு ஆகியவை கண் எரிச்சல், மூச்சுத் திணறலை ஏற்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ,குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் சாமந்தான் பேட்டை கடல் பகுதி வரை பரவியுள்ளது. இதனால் கடல் நீர் மாசு ஏற்பட்டு மீன்கள், நண்டுகள் உயிரிழந்து வருகின்றன.குழாய் உடைப்பு குறித்து தகவலறிந்த சென்னை பெட்ரோலியக் கழக அதிகாரிகள், ஓ.என்.ஜி சி அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதேசயம் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மீனவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சென்னை பெட்ரோலியம் கழகம் இந்த குழாய் அமைத்தபோது, பட்டினச்சேரி மீனவக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், குழாய் உடைப்பால் பாதிப்பு ஏற்பட்டு வருவதையடுத்து கிராமத்தில் அவரசக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Share this post with your friends