மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள போர்தபடா கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இந்த சூழலில் குடிநீர் வசதி செய்து தர வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் அங்கு வசித்து வரும் பழங்குடியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது வரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இருந்தாலும், அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் குடி நீரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மற்றொரு கிணற்றில் பெண்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.அவ்வாறு தண்ணீர் எடுத்து வரும் போது, கற்களில் தடுக்கி விழுந்து காயமடைந்து வருவதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More