Mnadu News

நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர்: மணிப்பூர் கலவரம் குறித்து கேள்வி: எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.

கடந்த மே 28ஆம் தேதி;, புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததோடு, அவைத்தலைவர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 17ஆம் தேதி அல்லது ஜூலை 21ஆம் தேதி துவக்கலாம் என, இரண்டு தேதிகள் உத்தேசமாக இறுதி செய்யப்பட்டுள்ளன.இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை கேள்வி எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் கூட்டத்தொடரில் விவாதங்கள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends