குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 29 வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே இன்றைய கூட்டம் தொடங்கியவுடன், அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறி விவகாரம் குறித்து அவைகளில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை காலை எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களின் கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இதில், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில், எல்லைப் பிரச்னை, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை அவைகளில் எழுப்ப ஆலோசனை நடத்தவுள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More