திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன், கமிட்டியின் தலைவர், பாஜக எம்.பி.,யும், முன்னால் காவல்துறை அதிகாரியுமான பிரிஜ் லாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் மணிப்பூர் வன்முறை குறித்த தற்போதைய நிலவரத்தை ஆராய்வதற்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பது குறித்து விவாதிக்க, உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அவசரத் தேவையை உங்களின் கவனத்துக்கு கொண்டுவரவே இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் இது மிகவும் முக்கியமான ஒரு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More