மூத்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காட்டுமிராண்டித் தனமான வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் மதவழிபாட்டுத் தலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். அதற்காக பெயர்மாற்றும் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தியிருந்தார்.இதனை விசாரித்த நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகராத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனுவின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியது. அதோடு, இதன் மூலம் அந்த பிரச்னைகளுக்கு உயிர் கொடுத்து நாடு எப்போதும் கொந்தளிப்பிலேயே இருக்க வேண்டுமா? என்று கேட்டதுடன், இந்தியா, ஒரு நாளும் பழைமைகளின் கைதியாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டனர்.அதே சமயம் நமது நாட்டின் ஒரு பகுதியை வெளிநாட்டினர் ஊடுருவி ஆண்டது உண்மைதான். ஆனால் அந்தப் பகுதிகளின் வரலாற்றை நாம் ஒரு போதும் அழித்துவிட முடியாது என்று கூறி, சிறப்பு குழுவை அமைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More