Mnadu News

நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது: கங்கனா ரனாவத் பேச்சு.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான், தன்னை சுற்றி பல துப்பாக்கிகள் இருப்பதால், தனக்கு இப்போதெல்லாம் மிகவும் பயமாக இருப்பதாக கூறியிருந்தார். சல்மான் கானின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், ‘நாங்களெல்லாம் நடிகர்கள். சல்மான் கானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடமிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளதால் அவர் எதற்கும் பயப்படத் தேவையில்லை. எனக்கு மிரட்டல் வந்தபோது கூட மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு வழங்கியது. இன்று நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. நாம் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை’ என்று தெரிவித்தார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More