Mnadu News

நாட்டின் அனைத்து அமைப்பையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸ{ம் கைப்பற்றிவிட்டன: சோனியா காந்தி காட்டம்.

காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இது ஒரு சவாலான காலம். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸ{ம் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றி அவற்றை நாசமாக்கிவிட்டன. ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருந்து நாட்டின் பொருளாதாரத்தையும் அவை சீரழித்துவிட்டன.நமது அரசியல் சாசனத்தின் மதிப்பை அவமதிக்கும் வகையில் பாஜக அரசின் செயல் உள்ளது. பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வெறுப்பு நெருப்பை கொழுந்துவிட்டு எரியச் செய்யும் நோக்கில் பாஜகவின் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.பாஜகவை நாம் வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களைச் சென்று சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் செய்தியை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல் இது அனைத்து மதங்கள், அனைத்து சாதிகள், அனைத்து பாலினங்களின் குரலை பிரதிபலிக்கும் இயக்கம். நாட்டு மக்கள் அனைவரின் கனவுகளையும் காங்கிரஸ் கட்சி நனவாக்கும். இந்திய ஒற்றுமை யாத்திரை கட்சிக்கு மிகப் பெரிய திருப்புமுனை. அத்துடன் எனது இன்னிங்ஸ் முடிவடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் பேசினார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More