Mnadu News

நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 635 ஆகப் பதிவு.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4கோடியே 46 லட்சத்து 67 ஆயிரத்து 311 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98 புள்ளி ஏழு ஒன்பதாக ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 175 ஆகக் குறைந்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219 கோடியே 83 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends