Mnadu News

நாட்டில் போதைப்பொருட்களை வேரறுக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசம்.

சர்வதேச போதை ஒழிப்பு நாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமுகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,பிரதமர் மோடி அரசு இந்தியாவில் இருந்து போதைப்பொருட்களை வேரறுக்க வேண்டும். போதைப் பொருள்கள் கடத்தலை அனுமதிக்கக் கூடாது என உறுதியாக உள்ளது. அதே நேரம்,இந்தியாவில் எந்தவிதமான போதைப்பொருள் வர்த்தகத்தையும் அனுமதிக்க மாட்டோம்.அத்துடன், போதைப்பொருளின் அச்சுறுத்தலை அகற்றி, போதையில்லா இந்தியா என்ற இலக்கை அடைய வேண்டும். போதைப்பொருட்களை ஒழிக்கும் வரை இந்த போராட்டம் ஓயாது. ஆனால் போதைப்பொருளுக்கு எதிராக மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது.அதே நேரம், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க முடியும். என்று பேசி உள்ளார்.

Share this post with your friends