Mnadu News

நாட்டில் 501-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 676 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41லட்சத்து 28 ஆயிரத்து 580 ஆக பதிவாகியுள்ளது. அதேவேளையில், நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 561 ஆகக் குறைந்துள்ளது.ூநாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends