தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பார்முலா இ-ரேஸ் பந்தயத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ராம் சரண் உள்ளிட்ட பிரலங்கள் கலந்து கொண்டனர். அப்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடலின் ஸ்டெப்பை நடிகர் ராம் சரண் கற்றுக்கொடுத்தார்.இந்த விடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.95-ஆவது ஆஸ்கர் விழா மார்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. 23 பிரிவுகளில் விருது வழங்கப்படவுள்ளது. அதில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலானது சிறந்த பாடலுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 4 பாடல்களுடன் அப்பாடல் போட்டியிடவுள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More