Mnadu News

நான் எதிர்பார்த்த ஆள் இவர்தான்: காதலை உறுதிப்படுத்திய நடிகை தமன்னா.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நடிகை தமன்னா, உடன் நடிப்பதால் ஒருவர் மீது நமக்கு ஈர்ப்பு வராது. நான் எத்தனையோ பேரிடம் நடித்துள்ளேன். ஒருவரை நமக்கு பிடிப்பதும் அவர்களுக்கு எதையாவது செய்வதும் நமது தனிப்பட்ட விஷயம். அந்தராங்கமானது. வாழ்வதற்காக ஒருவர் செய்யும் விஷயத்திற்காக எனக்கு இது நடக்கவில்லை என்பதை கூற விரும்புகிறேன். லஸ்ட் ஸ்டோரிஸ்2வில்தான் நாங்கள் பழகினோம். விஜய் வர்மாதான் நான் எதிர்பார்த்த ஆள். அவரிடம் என்னால் மிகவும் இயல்பாக பழக முடிந்தது. இந்தியாவில்தான் கணவர் ஒருவருக்காக பெண்கள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியிருக்கும். நானே உருவாக்கிய உலகத்தில் எனக்காக இருப்பவர்தான் அவர். நான் அதிகம் அக்கறைப்படும் நபராக அவர்தான் இருக்கிறார். ஆமாம், அவர்தான் என்னுடைய மகிழ்ச்சிக்கான இடமாக உள்ளார்.என்று கூறியுள்ளார்.

Share this post with your friends