வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது வாரிசு திரைப்படம். தமன் இசையில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல் ஆன நிலையில் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது எனலாம்.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார்கள் படம் வெளியாவதால் விஜய் படத்துக்கு குறைந்த திரை அரங்குகள் தருவதாக தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமூக தீர்வு காணப்பட்டு தற்போது வாரிசு பொங்கலுக்கு வருவது உறுதி என்பதை உணர்த்தும் வகையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
விஜய் காரின் முன் பகுதியில் அமர்ந்து டீ குடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி ட்ரெண்ட் ஆகியுள்ளது.
எனவே வாரிசு வெர்சஸ் துணிவு ரேஸில் வெல்லப்போவது யார் என்ற ஆவல் தற்போதே ரசிகர்கள் மத்தியில் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.