Mnadu News

நாளை மறுநாள் வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாளை ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More