உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலர் பகுதிக்கு தமிழகத்தை சேர்ந்த 30 பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை தொடர்ந்து இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.மேலும் வானிலை நன்றாக இருந்தால் ஹெலிகாப்டர் மூலம் இன்றே தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.