விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள சின்ன கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் 47 சென்ட் நிலத்தை வாங்குவதற்காக தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த சீனுவாசன், தவளகுப்பம் காவல் நிலைய ஓய்வுபெற்ற் ஏ எஸ் ஐ சுகுமார் ஆகிய இருவரும் இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு 1.47 சென்று நிலத்தை கிரயம் செய்து கொண்டு ரூபாய் 80 லட்சம் பணம் கொடுக்காமல் மோசடி செய்து ரவுடிகள் வைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. நிலத்தை இழந்த அரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீனிவாசனை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் புதுவை மாநிலம் தவளக்குப்பம் காவல் நிலைய ஓய்வு பெற்ற ஏ எஸ் ஐ சுகுமாரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More