மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்றது குறித்து காங்கிஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,பா.ஜ.க,வினர் எப்போதும் பொறாமையில் பேசுகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் மணிப்பூர் சென்று அங்குள்ள மக்களின் நிலையை புரிந்துகொள்ள முயற்சித்தால் அது டிராமா என்றும், பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தினால், போட்டோ எடுக்க கூடியதாகவும் சொல்கின்றனர். அவர்கள் ஜனநாயக மனநிலையில் இல்லை, சர்வாதிகார மனநிலையில் உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அமித்ஷாவோ, அவர்களது கட்சியினரோ மணிப்பூர் செல்லும்போது, எதிர்க்கட்சி தலைவர் ஏன் செல்லக்கூடாது?. என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More