Mnadu News

‘நீட்’ தேர்வுக்கு தயாராகுங்கள்: ஆளுநர்; ரவி அறிவுரை.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் ராஜ்பவனில் ஆளுநர்; ரவி கலந்து உரையாடினார். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 முடிவுகளில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் பேசியுள்ள ஆளுநர் ரவி, மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்.அதே சமயம், இலக்கை அடைவதில் மாணவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.அத்துடன், மொபைல் போன் பயன்படுத்துவதில் மாணவர்களிடையே கட்டுப்பாடு வேண்டும். அதோடு,படிப்பு சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வணிகவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் சிஏ படிப்பும், வழக்குரைஞர் ஆக விரும்பம் கொண்ட மாணவர்கள் சட்ட படிப்பை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் அடுத்தடுத்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும். என்று பேசி உள்ளார்.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More