Mnadu News

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கிய முருகேஷ், உதயகுமார்,விஜய், ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends