Mnadu News

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டம்தொண்டி கலந்தர் ஆசிக் அகமது என்பவர் தாக்கல் செய்த மனுவில், தொண்டி தெற்கு தோப்பில் சாலைக்குளம் என்ற நீர்நிலை உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.அதனை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில்,அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்திஅமர்வு பிறப்பித்த உத்தரவில்,அந்த இடம் 2000த்தில் உட்பிரிவு செய்யப்பட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் 31 பேருக்கு பட்டா வழங்கியுள்ளார். அதற்கு மாவட்ட ஆட்சியருக்கு உரிய அதிகாரம் உள்ளதாக என்ற கேள்வி எழுகிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர்நிலையை உட்பிரிவு செய்யவோ அல்லது வகைப்பாடு மாற்றம் செய்யவோ முடியாது. அனைத்து நீர்நிலைகளையும் அப்படியே பாதுகாக்க வேண்டும்.அதோடு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அந்த நீர்நிலையை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்.என்று உத்தரவிட்டுள்ளனர்.

Share this post with your friends