வெனிஸ் என்றதுமே, நீருக்குள் ஆனந்தக் குளியல் போடும் அந்த அழகிய நகரம் கண்ணில் வந்து மின்னும். நம்ம ஊர் பேருந்துகளைப் போல அங்கு படகுகள் கால்வாய்களுக்குள் நுழைந்து நுழைந்து செல்வதும் ரசிக்கத்தக்கதுதான்.ஆனால், தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெனிஸ் நகரின் கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு, படகுகள் அனைத்தும் சேருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன.அந்நகரின் ஒட்டுமொத்த போக்குவரத்தாகவும் நீர்நிலையில் படகுச் சேவை மூலமாகவே நடந்து வந்த நிலையில், தற்போது நகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ,நீர் டாக்ஸி, படகுப் போக்குவரத்து, அவசரகால உதவிகள் என அனைத்தும் இந்த நீர்நிலையை நம்பியே இருந்த நிலையில், அனைத்து வகையான படகுகளும் சேருக்கிள் சிக்கி பரிதாபநிலையில் உள்ளன.வெனிஸ் நகரைச் சுற்றியிருந்த 150 கால்வாய்கள் தண்ணீர் இன்றி, வறண்டுபோன கூவம் ஆற்றைப் போல காட்சியளிக்கிறது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பணியிடங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் செல்ல மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.பலரும் தங்கள் இருப்பிடங்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் சேற்றில் இறங்கி, குறைந்த தொலைவுக்கு இயக்கப்படும் படகுகளில் சென்று மீண்டும் சேற்றில் இறங்கிச் செல்லும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.மழை குறைந்தது, அதிகப்படியான வெப்பநிலை, கடல்மட்டம் தாழ்ந்தது, ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெய்த பனிப்பொழிவின் அளவு குறைந்தது என பல காரணிகள் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More