Mnadu News

நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த நிலையில், யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் றறற.வெய.யஉ.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். கூடுதல் விவரங்களுக்கு: றறற.வெய.யஉ.in இ ரபஉநெவ;வெய.யஉ.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More