Mnadu News

நெல்லையில் தீயில் கருகி உயிரிழந்த மூதாட்டி; வழக்கில் திடீர் திருப்பம்..!

திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரை அடுத்த மங்கம்மாள் சாலை பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை. இவரது தாய் அரசம்மாள்(70) கணவரை இழந்த நிலையில் தனது மகன் அண்ணாமலை குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மூதாட்டி அரசம்மாள் வீடு அருகே தீயில் கருகி நிலையில் உயிரிழந்தார். இது குறித்து நெல்லை தாலுகா காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டி அரசம்மாளை மகன் அண்ணாமலை மற்றும் மருமகள் அனிதா இருவரும் சேர்ந்து தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

தற்போது தாலுகா காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா இருவரையும் கைது செய்தனர்.

Share this post with your friends