Mnadu News

நேபாளத்தில் கனமழையினால் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு- 28 பேரைக் காணவில்லை.

கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபா, தப்லேஜங், பஞ்ச்தார் மற்றும் தன்குடா ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ,இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 5 பேர் உயிரிழந்ததாகவும் அதோடு, காணாமல் போன 28 பேரைத் தேடி வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சங்குவாசபாவில் 21 பேரும் பஞ்சதாரில் 4 பேரும், தப்லேஜங் மாவட்டத்தில் 3 பேரும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends