Mnadu News

நேரு நினைவு அருங்காட்சியக பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்.

காங்கிரஸ் எம்,பி.,யும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் அதன் பெயர் மோடி. கடந்த 59 ஆண்டுகளாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் சர்வதேச அறிவு சார் அடையாளமாகவும், புத்தகங்கள் மற்றும் ஆவணங்களின் புதையல் தீவாகவும் இருந்துள்ளது. இனி அது பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். இந்திய தேசிய அரசின் அரசியல் சிற்பியின் பெயர் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க, மறைக்க மோடி எதையும் செய்வார். பாதுகாப்பின்மை எண்ணம் காரமாக சிறுமையைச் சுமந்து திரியும் சிறிய மனிதர்”. என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Share this post with your friends