தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்குத் தொடர்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணாவை மார்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அண்மையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது.

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.
டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...
Read More