Mnadu News

பஜ்ரங் தளத்தை கர்நாடக அரசால் தடை செய்ய முடியாது: வீரப்ப மொய்லி விளக்கம்.

காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடக பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டது. அதில், வெறுப்பைத் தூண்டும் பி.எஃப்.ஐ., பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல் அமைச்சருமான வீரப்ப மொய்லி, எங்கள் தேர்தல் அறிக்கையில் பி.எப்.ஐ., பஜ்ரங் தளம் இரண்டையும் குறிப்பிட்டுள்ளோம். இதில் அனைத்து தீவிர அமைப்புகளும் அடங்கும். ஒரு அமைப்பை ஒரு மாநில அரசால் தடை செய்ய முடியாது. மத்திய அரசால் தான் தடை செய்ய முடியும். பஜ்ரங் தளத்தை கர்நாடக அரசால் தடை செய்ய முடியாது’ என்று கூறியுள்ளார்.

Share this post with your friends