Mnadu News

பஞ்சு மிட்டாயில் ஆபத்தான கலர் கலப்பு: நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்.

கேரளாவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பஞ்சு மிட்டாயில் நிறம் சேர்க்க ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனை ஆகி வருகிறது. இதனை வாங்கி உண்ட குழந்தைகள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக கேரள மாநில உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் கொல்லம் பகுதியில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் கேரள உணவு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பஞ்சு மிட்டாயில் நிறம் சேர்க்க ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. இந்தவகை ரசாயனம் ஜவுளி ஆலைகளில் பயன்படுத்தும் ரோட்டமைன் வகை ரசாயனம் ஆகும். இதனை சாப்பிட்டால் உடலில் கல்லீரல் பாதிப்பு அல்லது புற்றுநோய் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கொல்லத்தில் செயல்பட்டு வந்த பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு தயாரிக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்துக்கு அனுப்பினர். இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- கேரளாவில் உணவு பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொல்லத்தில் உள்ள பஞ்சு மிட்டாய் நிறுவனத்தில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் தயாரித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அங்கு பறிமுதல் செய்யப்பட்ட மிட்டாய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்ததும் இதில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More