Mnadu News

பட்ஜெட்டில் ஏழைகளுக்கான அறிவிப்பு எதுவும் இல்லை: காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு.

நடப்பாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில தேர்தல்களை கருத்தில்கொண்டு நரேந்திர மோடி அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை.,ஏழை மக்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான எந்த திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்படி உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டார்.

Share this post with your friends