Mnadu News

பட்ஜெட்டில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து பிரசாரத்தின் கடைசி நாளான இன்று முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.ஈரோடு சம்பத் நகரில் வாக்கு சேகரித்து முதல் அமைச்சர் பேசுகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், தமிழகத்திற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலகு பெற்று தருவதே தனது லட்சியம் என்றும், திமுகவின் அடித்தளமே ஈரோடுதான் என்றும் முதல் அமைச்சர்; ஸ்டாலின் பிரசாரத்தின்போது பேசினார்.

Share this post with your friends