Mnadu News

பட்ஜெட்: வரி உயர்வு பொருட்கள்…. வரி குறையும் பொருட்கள்.

2023-2024 பட்ஜெட்டில் சிகரெட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும், இதன் மீதான வரி 16 சதவிதம் வரை உயர்த்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப்பொருட்களுக்கு விலை உயர்வுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும்.

வரி உயர்வு பொருட்கள்:
தங்கம், வெள்ளி, வைரம் விலை உயர்வு:
தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.இதனால் தங்கள், வெள்ளி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விலை உயர்வை ஏற்படுத்தும்.
அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு. இதனால் ரப்பர் மற்றும் ஆடை கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சமையலறை மின்சார சிம்னிக்கான இறக்குமதி வரி உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி குறையும் பொருட்கள்:

கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார். இதனால் டிவி விலை குறையும். மேலும் செல்போன், கேமரா உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறையும். இது மக்களிடம் உபயோகப்படுத்தும் சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இறால் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப்படும். இதனால் இறால் உணவு பொருட்கள் மக்களுக்கு மலிவாக கிடைக்கும்.
தொலைக்காட்சி பேனல்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதம் குறைப்பு
பயோ, எரிவாயுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
சைக்கிள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் விளையாட்டு பொருட்களான பொம்மைகள் மற்றும் சைக்கிள் விலை குறைப்பிற்கு வழி வகுக்கும்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More