இயக்குநர் சற்குணம் மண் சார்ந்த கதைகளை அழுத்தமாக கொடுப்பதில் வல்லவர். அவரின் படத்தில் வரும் பாடல்களும் அனைவரையும் ஈர்க்கும்.

2021 ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டு தற்போது ரீலீசுக்கு தயாராகி வருகிறது பட்டத்து அரசன். லைக்கா நிறுவனம் தமிழ் சினிமாவில் வளரும், வளர்ந்துள்ள அனைத்து இயக்குனர்களுக்கும் தங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் கை கொடுத்து வருகிறது.

ஜிப்ரான் இசையில் மணி அமுதவன், விவேகா பாடல்களை எழுதி உள்ளனர். சில நாட்களில் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு குழு வெளியிட்டது.

லிங்க் : https://youtu.be/p0RBxRggknw